Friday, 11 July 2014

இந்தியாவில் மருத்துவர்கள் பற்றாக்குறை

உலக சுகாதார அமைப்பால் பரிந்துரைக்கப்பட்ட மருத்துவர் மக்கள் விகிதம் 1:1500 ஆக இருக்கும் பொழுது, இந்திய மருத்துவ கவுன்சில் சிலமாதங்கள் முன்பு வெளியிட்ட 'விஷன் 2015' அறிக்கை, இந்தியாவில் 1:1700 தான் இருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறது. 356 மருத்துவ கல்லூரிகளைக் கொண்டு மருத்துவத்துறையில் முதன்மை இடத்தில் இருக்கும்    இந்தியாவில் இந்த நிலைமை என்பது அச்சுறுத்துவதாகத்தான் இருக்கிறது. 

மருத்துவர் மக்கள் விகிதம் (ஆண்டுகளில்)
அதிகளவில் மருத்துவ கல்லூரிகள் இருக்கும் போதும் ஏன் இந்த பற்றாக்குறை என்பது சிந்திக்கத்தக்கது. சில ஆண்டுகளாகவே இந்தியாவின் மருத்துவத்துறை விரிவாக்கம் பெற்றது மட்டுமன்றி அதிகளவில் தனியார்  மயமாக்கவும் பட்டிருக்கின்றது. மொத்தம் 356 மருதுவக்கல்லூரிகளில் 164 மட்டுமே அரசு சார்ந்தது, 194 தனியார் மருத்துவ கல்லூரிகள். அதுமட்டுமன்றி, மருத்துவக்கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பிற்கு 46,300 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன, ஆனால் முதுநிலை பட்டப்படிபிற்கோ 22,000 இடங்களே உள்ளன. இந்த பரந்த வேறுபாடே இந்தியாவின் மருத்துவர் பற்றாக்குறைக்கு காரணம். நுழைவுத்தேர்வு பல மருத்துவப் பட்டதாரிகளை முன்னேற விடாமல் முடக்குகிறது.

"பல விதங்களில் இந்த வடிகட்டும் செயல் நடைபெறுகிறது, அதிக அளவில் போட்டி, ஜாதி சார்ந்த இட ஒதுக்கிடு, குறைந்த முதுநிலை இடங்கள் இவை திறன் இருக்கும் பட்டதாரிகளுக்கு இடர் சேர்கின்றன. பொது நுழைவுத்தேர்வைக் கடந்து வந்தாலும் பலரால் பிடித்த துறையில் படிக்க முடிவதில்லை, இதனால் மருத்துவம் படித்த மாணவர்கள் சிலர் தங்கள் துறைகளையே மாற்றிக் கொள்கிறார்கள்” என்கிறார் மருத்துவக் கல்லூரி மாணவி ஜனனி.

இந்தியாவில் உள்ள மூத்த மருத்துவர்கள் ஓய்வு பெறும் நிலையில் சிறப்பு அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்களிலும் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.  

மறுபுறம், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பின் இடங்களின் எண்ணிக்கையை சமன் செய்வது சரியா என்ற கேள்வி எழுகிறது. பல நிபுணர்களின் கருத்து என்னவென்றால், "இது மட்டும் முழுமையான தீர்வு ஆகாது. இதை தவிர முதுகலை பட்டப்படிப்பில் எண்ணிக்கையை  உயர்த்துவது கல்வித்தரம் குறைவதற்கும் வழிவகுக்கிறது. இதற்கு பதிலாக நவீன உபகரணங்கள், உட்கட்டமைப்பை அதிகரிப்பது, தனியார் கல்லூரிகள் அல்லாமல் அரசு மருத்துவக் கல்லூரிகளை அதிகரிப்பது போன்ற செயல்களைச் செய்தால் அது இக்கட்டத்தில் உதவும்”


-ரஞ்சனி ராமநாதன்



Tuesday, 8 July 2014

குறும்படம் சொல்லும் கதைகள்

இக்காலத்தில் குறும்படம் கொண்டு சொல்ல எல்லா இளைஞரிடமும்  ஒரு கதை உள்ளது. ஒரு குறும்படத்தின் வெற்றி அதில் உள்ள உணர்சிகளை  நன்றாக படம்பிடித்து காட்டுவதில் தான் உள்ளது. அண்மையில் பல குறும்படங்கள் முழு நீழ படமாக மாறி வருகிறது. அதுமட்டுமின்றி குறும்படங்கள் வெள்ளி திரையில் நுழைவதற்கு ஒரு துடுப்பு  சீட்டாகிவருகிறது. ஆனால் உண்மையில் ஒரு குறும்படத்தை படைப்பது அவ்வளவு எளிதா?



"லிட்டில் ஷோ அவார்ட்ஸ்-2014” விருதினை பெற்ற கனேஷ் குமார் மோஹனுடன் ஒரு சந்திப்பு
'குட்டிமா' என்ற குறும்படம் இந்த ஆண்டு 'லிட்டில் ஷோ அவார்ட்ஸ்'இல் 600க்கும் மேற்பட்ட குறும்படங்களுடன் போட்டியிட்டு நான்கு விருதுகளை தட்டிச்சென்றது. இந்த குறும்படத்தில் ஒரு பாட்டிக்கும் பேரன்னுக்கும் உள்ள  உறவினை அழகாக படம்பிடித்து காட்டியிருக்கிறார் படத்தின் இயக்குனர் கணேஷ் குமார் மோகன். 

ரஞ்சனி: இக்கால குறும்படங்களிலிருந்து மாறுபட்ட 'குட்டிமா' திரைக்கதை எப்படி உருவானது?

கணேஷ்: நான் புதிதாக எதுவும் செய்ய நினைக்கவில்லை. நான் கொடுக்க நினைத்தது ஒரு எளிமையான, உண்மையான குறும்படம்.  என் பாட்டிக்கும்  எனக்கும் இடையே நிகழ்ந்த பசுமையான தருணங்களை என் மனதில் நினைவுகொண்டபோது ஏற்பட்டதுதான் 'குட்டிமா'. எங்களிடையே உள்ள உறவு ‘எலியும்-பூனையும்’ போன்றது. தலைமுறை இடைவெழியால் நடக்கும் இந்த சிறு சிறு உணர்சிகளை காட்டுவது தான் என் குறும்படம். 

ரஞ்சனி: குறும்படம் என்றாலே அது குறிப்பிட்ட காலவரையறை தான் இருக்க வேண்டும் என்று ஒரு பொது கருத்து உள்ளது. இது சரியா?

கணேஷ்: ஒவ்வொரு கதைக்கும் அதன் சொந்த கால வரையறை தான் இருக்க வேண்டும் என்று நான் நினைகிறேன். ஒவ்வொரு திரைப்பட தயாரிபளருக்கும் அவர்களின் சொந்த பாணி உள்ளது.

ரஞ்சனி: இக்கால சூழ்நிலையில் ஒரு குறும்படம் எடுப்பதில் உள்ள பிரச்சனைகள் என்ன? 

கணேஷ்: முந்தய நாட்களைவிட இப்பொழுது குறும்படம் எடுப்பது வெகு சுலபமாக ஆகி வருகிறது. எனினும், ஒரு குறும்படத்திற்கான ஆவணங்களை கண்டுபிடிப்பது கடினம் தான். பல நடிகர்கள், படம்ப்பிடிபதற்குரிய இடங்கள், கேமராக்கள், தொழில்நுட்பக்கருவிகள் கிடைப்பது சுலபமல்ல.

ரஞ்சனி: சிலநாட்களில் வெள்ளித்திரையில் படையெடுக்க போகிறீர்கள், நீங்கள் அறிமுக இயக்குனராக பங்குபெறும் படம் எந்த நிலையில் உள்ளது? எப்பொழுது வெளிவருகிறது? குறும்படங்கள் சினிமா உலகில் நுழைய துடுப்பு சீட்டு என்று நினைகின்றிர்களா

கணேஷ்: குறும்படங்கள் இப்போது ஒரு தயாரிப்பாளரை சந்திக்க வருகை அட்டையாக காணப்படுகின்றன. நான் திரைப்பட இயக்குனர் ஆவேன் என்று நினைக்கவேயில்லை. என் முதல் படத்தின் தயாரிப்பாளர் "5 ஸ்டார் மூவீஸ்" கதிரேசன், அது முழு நகைச்சுவை திரைப்படம். நடிகர்கள், பணிக்குழுக்கள் பற்றிய செய்தி ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் வெளிவர உள்ளது.

ரஞ்சனி: இந்த துறையில் யார் உங்களுக்கு முன்னேற எது  உத்வேகம் தருகிறது?

கணேஷ்: ஒவ்வொரு நல்ல படம் எனக்கு ஊக்கம் தரும். எல்லா படத்தில் இருக்கும் நற்கருத்துக்களை நான் உள்வாங்க முயற்சிக்கிறேன்.

ரஞ்சனி: எப்படி குறும்படம் எடுப்பதில் உங்களுக்கு ஆர்வம் வந்தது?

கணேஷ்: சிறுவயதிலிருந்தே நான் படம் எடுப்பதில் ஆர்வம் கொண்டிருந்தேன். நானே என் படங்களில் நடித்து வந்தேன், என் உறவினர்கள் தான் ஏன் பார்வையாளர்கள். அனால் அதை என் வாழ்க்கை தொழிலாக எடுப்பதற்க்கு தைரியம் இல்லை. அதனால் கணிப்பொறி துறையை தேர்வு செய்தேன். இருந்தும் அதில் என்னக்கு பற்று இல்லை. வேலையை விட்டுவிட்டு என் கனவுகளை தொடர்ந்தேன்.

ரஞ்சனி: நீங்கள் "லிட்டில் ஷோ அவார்ட்ஸ்" 'இல் கைப்பற்றிய விருதுகளை பற்றியும் உங்களுக்கு கிடைத்த பாராட்டுக்களை பற்றியும் என்ன நினைகிறீர்கள்  ?

கணேஷ்: இது உண்மையிலேயே ஒரு மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது. குறிப்பாக கே. ரங்கம்மா பாட்டிக்கும் விருது கிடைத்ததில் பெருமிதம் கொள்கிறோம். நான்கு விருதுகளை வென்றது இதுவே முதல் முறை. 

குறும்படத்துறை வெகுவாக வளர்ந்து வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியும் அதிகரித்துக்கொண்டே போகிறது. 'லிட்டில் ஷோஸ்' போன்ற தளங்கள் புதிய திறன்களை வெளிக்கொண்டுவர பல விதங்களில் உதவிவருகின்றனர். இருப்பினும் அளவற்ற வல்லுனர்கள் வளர்த்து வரும் துறையானத்தால் சில திறன்கள் இந்த கடலில் காணமல் துலைந்து போகின்றன.